திருப்பத்தூரில் பெண் சிசு காக்கும் விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூரில் பெண் சிசு காக்கும் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் பெண் சிசு காக்கும் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநரகம் சார்பில் திருப்பத்தூர் அரசு மருதுபாண்டியர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களால் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இப்பேரணிக்கு தாலுகா மருத்துவ அலுவலர் கெளசல்யாள் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் சாந்தி, காளிராஜன், விஜயகுமாரி, ஹரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை அனைத்துப் பணியாளர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
பெண் சிசு பாதுகாப்பு குறித்து பேராசிரியர்கள் சிவக்குமார், கார்த்திகேயன், உயிரியல் துறைத் தலைவர் ஆனந்தவள்ளி ஆகியோர் பேசினர். பேரணி, திருத்தளிநாதர் ஆலயத்தில் தொடங்கி காந்தி சிலை, பேருந்து நிலையம், மதுரை ரோடு, அண்ணா சிலை வழியாக அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது. தலைமைச் செவிலியர் தனலட்சுமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.