FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காளையார்கோவிலில் நுண்ணீர் பாசனத் திட்ட சிறப்பு முகாம் இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் வியாழன் (ஆக.2), வெள்ளி (ஆக.3) ஆகிய இரு தினங்கள் நுண்ணீர் பாசனத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:03 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் வியாழன் (ஆக.2), வெள்ளி (ஆக.3) ஆகிய இரு தினங்கள் நுண்ணீர் பாசனத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    காளையார்கோயில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் காளையார்கோயில் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா, நிலவரைபடம், அடங்கல் சான்று,சிறு,குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், புகைப்படம்-2 ஆகியவற்றுடன் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் அமைக்க ஏதுவான பொருள்களை அரசு மானியத்துடன் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், சிட்டா,நிலவரைபடம்,அடங்கல் சான்று,சிறு,குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் இல்லாத விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு குறிப்பிட்ட தேதிக்குள் மேற்கண்ட சான்றிதழை வட்டார தோட்டக்கலை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பித்த விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் அமைப்பதற்கான பொருள்கள் வழங்கப்படும்.
  காளையார்கோயில் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அ.ரேகா புதன்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments