FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிராம சபைக் கூட்டம்:  கிராம மக்கள் புறக்கணிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டை மேலையூர் ஊராட்சியில் புதன்கிழமை ஊராட்சி செயலர் முறையான 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டை மேலையூர் ஊராட்சியில் புதன்கிழமை ஊராட்சி செயலர் முறையான வரவு செலவு கணக்கு காட்டாததால் கிராமத்தினர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
    கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் நடுவிக்கோட்டை மேலையூர் ஊராட்சி உள்ளது. இங்கு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் கிராமத்தினர் முன்னிலையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, கிராமத்தினர் வரவு செலவு வாசிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி செயலர் புத்தகம் கொண்டுவரவில்லை. பேப்பரில் எழுதிகொண்டு வந்திருக்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதே போல், தண்ணீர் மற்றும்  நியாயவிலைக் கடை சம்பந்தமாக கிராமத்தினர் கேட்டதற்கு, பார்வையாளரும் முறையான பதில் தெரிவிக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments