பணம் மோசடி: தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கட்டிய பணத்தை இரட்டிப்பாக திருப்பித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது கடுமையான
கட்டிய பணத்தை இரட்டிப்பாக திருப்பித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) து. இளங்கோவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனு விவரம்: சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செலுத்தும் பணம் இரட்டிப்பாகத் திருப்பி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் இந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தினோம்.
நிறுவனம் அறிவித்தபடி, கடந்த 2013 ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. அதன்பின்னர், வாடிக்கையாளர்களுக்கு முறையாக பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இது குறித்து அந்த நிறுவனத்தில் பலமுறை கேட்டும், இதுவரை எந்தவித பயனும் இல்லை.
எனவே, பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த அந்த நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.