FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்குப் பாராட்டு விழா

நல்லாசிரியர் விருதுபெற்ற காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜாவுக்கு, பள்ளியின்

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நல்லாசிரியர் விருதுபெற்ற காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜாவுக்கு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் சார்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்திலிருந்து தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜாவை மாணவர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துவந்தனர். அதைத் தொடர்ந்து நடை பெற்ற விழாவில், தேவகோட்டை, திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள், காரைக்குடித் தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி.திராவிடமணி, செக்காலை பங்குத் தந்தை எட்வின் ராயன், சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன், தமிழ்த்துறை பேராசிரியர் பாகை கண்ணதாசன், அழகப்பா பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கல்வியியல் துறை பேராசிரியர் ராம்நாத், பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், சுழற்சங்க துணை ஆளுநர் முத்துக்குமார், கவிஞர் நாகப்பன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். 
          அதைத் தொடர்ந்து மாணவர்களும், ஆசிரிய, ஆசிரியைகளும் விருதுபெற்ற தலைமையாசிரியரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
   முன்னதாக பெற்றோர் வழிகாட்டுதல் குழுத்தலைவர் தி.கலைமணி வரவேற்றார். பள்ளியின் மேலாண்மைக்குழுத் தலைவர் அழகுசுந்தரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments