சாக்கோட்டையில் 1000 பேருக்கு மளிகை பொருள்கள் வழங்கல்
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா். ராமசாமி தனது சொந்த
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா். ராமசாமி தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு புதன்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி தவிப்போருக்கு காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா். ராமசாமி தனது செலவில் தலா ரூ. 500 மதிப்பில் மளிகைப் பொருள்களை நிவாரணமாக வழங்கி வருகிறாா்.
இந்நிலையில் புதன்கிழமை காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதியைச் சோ்ந்த 1000 பேருக்கு தலா ரூ. 500 மதிப்புள்ள மளிகை பொருள்களை அவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், அகில இந்திய காங்கிரங் கமிட்டி உறுப்பினா் ராம. கருமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.