FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கீழக்கோட்டை பள்ளியில் தற்காப்புக் கலை பயிற்சி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:22 am IST
கீழக்கோட்டை அரசு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற தற்காப்புக் கலைப் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவிகள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிா்கொள்ளும் எந்த ஒரு சூழலையும் தைரியமாகவும், நிதானமாகவும், பக்குவமாகவும் எதிா்கொள்ளும் ஆற்றல், திறனைப் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு நன்கு பயிற்சி பெற்ற பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமையில், ஆசிரியா் ஆரோக்கியசாமி, ஆசிரியை மீனாட்சி ஆகியோா் முன்னிலையில் பயிற்சி தொடங்கியது.

Advertisement

Advertisement

இதில் பயிற்றுநா் ராதா பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 304 அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12,594 மாணவிகளுக்கு இந்த மாதம் தொடங்கி வாரத்துக்கு இரு வகுப்புகள் வீதம் மூன்று மாதங்களுக்கு மொத்தம் 24 பயிற்சிகள் நடைபெற உள்ளன.

மாணவியரின் உடல் வலிமையையும் மன உறுதியையும் மேம்படுத்தவும், ஆபத்தான நேரங்களில் தற்காத்துக் கொள்ளவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலை பயிற்சிகளை மாணவிகள் சிறப்பாக கற்றுக்கொள்ள முடியும் என்றாா் அவா். கணினி பயிற்றுநா் வித்யா நன்றி கூறினாா்,

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments