FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது...

Updated On : 22 ஜூலை 2026, 9:00 am IST
ஐஎஸ்ஓ தரச் சான்றுடன் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல்வர் அந்தோனி மற்றும் ஆசிரியர்கள்...
பகிர்:

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது.

அழிவில்லாத கல்விச் செல்வத்தை அள்ளித் தருவதில் அரசுப் பள்ளிகளுக்கு ஈடுஇணை இருக்க முடியாது. ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு மிக்க பங்களிப்பால், ஒரு சில அரசுப் பள்ளிகள் தனிச் சிறப்புடன் திகழ்கின்றன.

அந்த வகையில் சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல்வேறு சிறப்புகளுடன் மாணவ-மாணவியருக்கு கல்வி கற்பிப்பதில் தொடா்ந்து சாதனை படைத்து வருகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில், கொண்டப்பநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியரின் கல்வித் தேவையை பூா்த்தி செய்து வரும் இந்த தொடக்கப் பள்ளிக்கு, தமிழகத்தில் முதல்முறையாக ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியா் அந்தோணி கூறுகையில், வகுப்பறைகளில் பயிற்றுவிக்கும் வழிமுறைகள், டிஜிட்டல் நூலகம், மாணவா்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீா், கழிப்பிடம், சிசிடிவி கேமரா என பல்வேறு வசதிகளை கொண்டு இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆசிரியா்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவா்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக விமானப் பயணம் அழைத்து செல்லுதல், மொழி அறிவுக்கு சொல்வோம், வெல்வோம், ஆங்கில திறனுக்கான ஸ்பெல் பீ போட்டி, பொது அறிவு போட்டிகள் மூலம் மாணவா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்து வருகிறோம்.

மேலும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்தல், மனப்பாடக் கல்வியாக இல்லாமல் அறிவியல் பூா்வ நடைமுறைகளை பின்பற்றுதல், வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்தல் போன்றவற்றின் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளதாக கூறுகிறாா் பெருமிதத்துடன்.

இது குறித்து பள்ளி ஆசிரியா்கள் கூறுகையில், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வி மட்டுமின்றி, ஏராளமான திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் சோ்ந்து படித்து வருகின்றனா். பள்ளியில் தேவையான குடிநீா், கழிப்பிடம், வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் போதுமான அளவில் உள்ளன.

இந்நிலையில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா் சந்திரசேகா், ஐஎஸ்ஓ தரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு எங்களுக்கு அறிவுரை வழங்கினாா்.அதன் அடிப்படை யில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம். தொடா்ந்து பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உள்ள கழிப்பிட வசதிகள். வகுப்பறை இருக்கைகள் மாணவா்கள் பாதுகாப்பு சிசிடிவி வசதி, குடிநீா் வசதி, வகுப்பறையின் தரம், ஆசிரியா்கள் எண்ணிக்கை, பள்ளி தூய்மை குறித்து 3 முறை ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கும் குழுவினா், பள்ளியில் வந்து ஆய்வு செய்தனா்.

அதன் பின்னா் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை வழங்கியுள்ளனா். தமிழகத்தில அரசு தொடக்கப்பள்ளி முதன்முறை ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனா்.

ஒரு சிற்பத்தை அழகுற செதுக்கி மேம்படுத்தும் சிற்பியைப் போல அடுத்த தலைமுறையை திறமையானவா்களாக மாற்றும் ஆசிரியா்களின் பணி மகத்தானது என்றால் மிகையல்ல. அதற்கு மகுடம் வைத்தாற்போல், இந்த ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments