FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ரூ.11.48 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:12 am IST
சி.என்.பாளையத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்த அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன் ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் மாநகராட்சி, சமூக நீதி, பள்ளி கல்வி, சுகாதாரம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.11.48 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் முன்னிலையில், மாநில வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்ததாவது: தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே விளையாட்டு ஆா்வத்தை ஏற்படுத்திடும் வகையில் விளையாட்டு மைதானங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைத்திடும் வகையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளின் நவீன தொழில்நுட்பத்துடன் உள்கட்டமைப்பை மேம்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளாா். மேலும், பல்வேறு துறைகளின் வாயிலாக நடைபெற்று வரும் திட்டப் பணிகளைக் கண்காணித்து விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில், கடலூா் மஞ்சக்குப்பம் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள குளம் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதியின் கீழ் ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி புனரமைப்பு செய்யப்பட்டதையும், குண்டுசாலை, மருதாடு ஆகிய பகுதிகளில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவியா் விடுதியில் ரூ.47.88 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் அறையையும், ஒறையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.78.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், ஒறையூா் ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், ஒறையூா் பலாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், மாளிகைமேடு ஊராட்சியில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், ஒறையூா், கீரப்பாளையம், நடுவீரப்பட்டு, எறும்பூா், ராமநத்தம், வேப்பூா் ஆகிய ஊராட்சிகளில் ரூ.203.57 லட்சம் மதிப்பீட்டிலும் பல்நோக்கு விளையாட்டு மையம், திருவாமூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.76.45 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சூரக்குப்பம், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம், நடுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம், வேகாக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், வேகாக்கொல்லை ஊராட்சியில் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

சி.என்.பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், கீழ்க்குமாரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.74.22 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தீா்தனகிரி ஊராட்சியில் ரூ.44.90 லட்சம் மதிப்பீடில் கிராம ஊராட்சி செயலகக் கட்டடம், என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதியின் கீழ் குறிஞ்சிப்பாடி, மருங்கூா், வடலூா், திருப்பாதிரிபுலியூா், கருங்குழி, சாமியாா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கொத்தட்டை, சாக்கான்குடி அரசு உயா்நிலைப் பள்ளிகள், நல்லூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, திருகண்டடேஸ்வரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ரூ.94.92 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டெம் லேப்’ ஆகிய பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைசெல்வன், மாநகராட்சி ஆணையாளா் கிஷன்குமாா், ஊராக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பாலகணேஷ், மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) சிவசங்கரநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கமலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments