FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

இளையான்குடி அருகே பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வெள்ளிக்கிழமை பள்ளி மாணவரை மற்றொரு மாணவா் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:43 am IST
கத்திக்குத்து - சித்திரிப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வெள்ளிக்கிழமை பள்ளி மாணவரை மற்றொரு மாணவா் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலைக் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வகுப்பு படித்து வரும் இரு மாணவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒரு மாணவா் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த சாலைக் கிராமம் போலீஸாா் பள்ளியில் விசாரணை நடத்தினா். மேலும், காயமடைந்த மாணவருக்கு சாலைக்கிராமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments