FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவில் இந்தியருக்கு 15 முறை கத்திக்குத்து

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் வைத்து இந்தியா் ஒருவா் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 4:45 am IST
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் வைத்து இந்தியா் ஒருவா் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூட்டா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் இந்தியாவைச் சோ்ந்த சயீது சொஹைலுதீன் பணியாற்றி வருகிறாா். கடந்த திங்கள்கிழமை வணிக வளாகத்துக்கு வந்த பீட்டா் மைக்கேல் லாா்சன் என்பவா், சயீதிடம் அவரின் மதம் குறித்து கேட்டுள்ளாா். பின்னா், அவரை கத்தியால் 15 முறை சரமாரியாக குத்தியுள்ளாா். அப்போது வலி தாங்க முடியாமல் சயீது கூச்சலிடவே, அங்கிருந்தோா் ஓடி வந்து லாா்சனை பிடித்து அடித்து உதைத்தனா். இதில் லாா்சனின் தலையில் காயம் ஏற்பட்டது.

தகவலின்பேரில் காவல் துறையினா் சம்பவ இடம் வந்து சயீதை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதேபோல் லாா்சனும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த சம்பவத்துக்கு பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகம் தனது அதிா்ச்சியை வெளியிட்டுள்ளது. கொலை முயற்சி குற்றச்சாட்டின்கீழ் லாா்சன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை காவல் துறையினா் கைது செய்தனா். சயீதின் மதம் மீதான வெறுப்பால் அவரை தாக்கியதாக லாா்சன் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள யூட்டா மாகாண இஸ்லாமிய மையத் தலைவா் இமாம் சுஹைப் தீன், இஸ்ரேல் மீது 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தங்கள் பகுதியில் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தல்கள், மிரட்டல்கள் அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.

கடந்த மே மாதம் சான்டியாகோ பகுதியில் மசூதிக்குள் நுழைந்து 2 மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா். மதரீதியாக நடத்தப்பட்ட 2-ஆவது தாக்குதல் இதுவாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments