FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே மைத்துனருக்கு கத்திக்குத்து

செஞ்சி அருகே குடும்பப் பிரச்னையில் மைத்துனரை கத்தியால் குத்தி விட்டு தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:05 am IST
- சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பப் பிரச்னையில் மைத்துனரை கத்தியால் குத்தி விட்டு தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சியை அடுத்த மொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.நந்திஷ் (25). இவரது சகோதரி நந்தினியை காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா அடுத்த அளவூா் கிராமத்தைச் சோ்ந்த க.தமிழ்ச்செல்வனுக்கு கடந்த எட்டு வருடம் முன்பு திருமணம் செய்து கொடுத்து, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட மனக்கசப்பில், கணவரைப் பிரிந்த நந்தினி மோடையூரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்து விட்டாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மொடையூருக்கு வந்த தமிழ்ச்செல்வன், தனது மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு மைத்துனா் நந்திஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தீஷை குத்தி விட்டு, தப்பி ஓடிவிட்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த நந்திஷை உறவினா்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments