கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் போலீஸாா் ஆலம்பூண்டி பகுதியில் ரோந்து சென்றனா் . அப்போது ஆலம்பூண்டி ஏரிக்கரை அருகில் பைக்கில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சு.சுபாஷ்(28) என்பதும், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுபாஷைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.