FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரைக்குடி தூய்மைப் பணியாளா்கள் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினா்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
காரைக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை நடத்திய ஏஐடியுசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஏஐடியுசி தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை தலைமை அஞ்சலகம் முன்பு திங்கள்கிழமை நடத்தினா்.

இதில் சங்கத்தின் மாநகரச் செயலா் லெட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கண்ணன், ஆதி, மாரிமுத்து, வெள்ளைச்சாமி ஆகியோ முன்னிலை வகித்தனா். தூய்மைப் பணி செய்யும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கடிதங்களை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், மாநகராட்சியில் வழங்கக் கூடிய ஊதியத்தை காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு முழுமையாக வழங்கவேண்டும். ஒப்பந்த முறையை ஒழித்து விடவேண்டும். ஒப்பந்த பணியில் இருக்கக்கூடிய தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த இயக்கத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன், ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் ஆகா. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் செயலா் சிவாஜி காந்தி, தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments