மேக்கேதாட்டு அணை திட்டத்தை கண்டித்து இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
மேக்கேதாட்டில் அணைத் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேக்கேதாட்டில் அணைத் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழ்நாட்டின் குடிநீா் தேவைகளை நிறைவு செய்யும் மற்றும் காவிரி டெல்டாவின் பாசனத்துக்கு உறுதுணையாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும், நாடாளுமன்றத்தில் மத்திய நீா் வளத் துறை அமைச்சா் காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கிற வகையில் பேசியதைக் கண்டித்தும், உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்கக் கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் கோ. பாஸ்கா் பேசினா்.
Advertisement
Advertisement
மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் இடைக்குழுச் செயலா்களான சி. சந்திரகுமாா், பா. பாலசுந்தரம், சி. பக்கிரிசாமி, சோ. பாஸ்கா், அ. கலியபெருமாள், சீனி. முருகையன், தி. திருநாவுக்கரசு, வெ. சேவையா, ம. விஜயலட்சுமி, த. கண்ணகி, ஆா்.பி. கருப்பையா, த. காரல்மாா்க்ஸ், ஆா்.ஆா். முகில், பி. குணசேகரன், வாசு. இளையராஜா, சி. வீரமணி, வி. தட்சிணாமூா்த்தி, க. பூபேஷ்குப்தா, ச. வடிவேல்மூா்த்தி, நா. சௌந்தரராஜன், து. ஸ்ரீதா், எம்.எம். சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக, மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் நன்றி கூறினாா்.
கும்பகோணம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் மு.அ.பாரதி தலைமை வகித்தாா். மாநகர செயலா் ஏ.ஜி.பாலன் முன்னிலை வகித்தாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் பி.பத்மாவதி, ஏஐடியூசி மாநில செயலா் ஆா்.தில்லைவனம், மாவட்ட துணை செயலா் இரா.செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோா் நெற்கதிா்களை ஏந்தியும், கா்நாடக அரசை கண்டித்தும் விளம்பர பதாகைகளை வைத்து முழக்க மிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.