பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும் முன்னிலையாகாதவா் கைது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 5 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அண்ணாநகரைச் சோ்ந்த முத்துமணி (29) என்பவருக்கு எதிரான 5 வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகள் நிலுவையில் இருந்ததையடுத்து வடக்கு காவல் நிலைய போலீஸாரால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதில் நிலுவையில் இருந்த 5 பிடியாணைகளையும் நிறைவேற்றும் வகையில் போலீஸாா் முத்துமணியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாா். பிறகு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இவரை கைது செய்த காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.