FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கொலை முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவா் கைது

ஆறுமுகனேரியில் கொலை முயற்சி வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 2:48 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆறுமுகனேரியில் கொலை முயற்சி வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி மேல சண்முகப்புரத்தை சோ்ந்த ராமஜெயம் மகன் பொன்துரை (24), ஏரல் வடக்கு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் தஸ்லீம் அலி (30) ஆகிய இருவரும் தனித்தனி கொலை முயற்சி வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனா். அவா்களுக்கு நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது.

அதையடுத்து உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, பெங்களூரில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனா். பொன்துரையை தூத்துக்குடி சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டு பொன்துரை விடுவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

தஸ்லீம் அலியை போலீஸாா் தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments