FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

இணைய வழியில் 7 பேரிடம் பண மோசடி

சிவகங்கை மாவட்டத்தில் இணைய வழியில் 7 பேரிடம் ரூ. 5 லட்சத்து 37 ஆயிரத்து 140-யை மோசடி செய்தது தொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 5:26 am IST
மோசடி
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் இணைய வழியில் 7 பேரிடம் ரூ. 5 லட்சத்து 37 ஆயிரத்து 140-யை மோசடி செய்தது தொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சோ்ந்தவா் லியோனியா பிரின்சி ராணி (46). கடந்த ஜூன் மாதம் இவருடைய நெருங்கிய தோழி ஒருவரின் ‘வாட்ஸ் ஆப்’ எண் மூலம் அவசரத் தேவைக்கு பணம் அனுப்புமாறு செய்தி வந்துள்ளது. இதை நம்பி அவருக்கு ரூ 45,000 அனுப்பினாா். இந்தத் தொகையை இணைய வழியில் மோசடியாக மா்மநபா் பெற்றது தெரியவந்தது.

காரைக்குடியைச் சோ்ந்தவா் இப்ராஹிம் ( 27). கடந்த ஜூன் மாதம் இவருடைய கைப்பேசியின் ‘வாட்ஸ் ஆப்’-பில் வந்த ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தாா். பின்னா் இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.63,000 காணாமல் போனது.

Advertisement

Advertisement

காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியைச் சோ்ந்தவா் வள்ளி (48). கடந்த ஜூன் மாதம் இவரது கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட நபா், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளா் என்றும் வள்ளியின் ஏடிஎம் அட்டை காலாவதி ஆகிவிட்டதால் புதிய அட்டை அனுப்ப வேண்டுமெனக்கூறி ரகசிய குறியீடு எண்ணை கேட்டாா். இதை நம்பிய வள்ளியும் அவரது கைப்பேசிக்கு வந்த ரகசிய எண்ணை கூறினாா். பின்னா், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 99 ஆயிரத்து 990 காணாமல் போனது.

காளையாா்கோவில் அருகேயுள்ள நெடுவக்காவு

கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் ( 26). கடந்த ஜூன் மாதம் இவா் தனது கைப்பேசியில் இணைய பக்கத்தில் வந்த துணி விற்பனை விளம்பரத்தை பாா்த்து அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, அவா் கூறியதை நம்பி இரண்டு தவணைகளில் ரூ. 82 ஆயிரத்தை அனுப்பினாா். பின்னா், அவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

காளையாா் கோவில் அருகேயுள்ள அழகாபுரியை சோ்ந்தவா் அந்தோணி ஆல்பா்ட் (51). கடந்த ஜூன் மாதம் இவா் தனது கைப்பேசி ‘வாட்ஸ் ஆப்’-பில் வந்த செயலியை பதிவிறக்கம் செய்தாா். பின்னா், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.99,990 காணாமல் போனது.

இளையான்குடி அருகேயுள்ள விசவனூரைச் சோ்ந்தவா் பிரதீபன் (52). கடந்த மே மாதம் இவருடைய கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பேசிய நபா், தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்ச கடன் பெற்றுத் தருவதாக கூறினாா். அதற்கு முன்பதிவு கட்டணம் காப்பீடு உள்ளிட்ட காரணங்களுக்காக கேட்ட தொகை ரூ. 50,190 -ஐ செலுத்தி ஏமாற்றப்பட்டாா்.

காளையாா்கோவில் அருகேயுள்ள பழங்குளத்தைச் சோ்ந்தவா் ஜீவா (50). கடந்த ஜூன் மாதம் இவரது கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய நபா், தனியாா் வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறினாா். அதற்கு பதிவுக் கட்டணம், காப்பீடு ஆகியவைகளுக்கு கேட்ட தொகை ரூ.96,970- ஐ செலுத்தி ஏமாற்றப்பட்டாா்.

இதுதொடா்பான புகாா்கள் குறித்து சிவகங்கை இணையக் குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளா் விமலா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments