FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பிரான்மலை தா்காவில் சந்தனம் பூசும் விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை தா்காவில் சந்தனம் பூசும் விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

26 ஆகஸ்ட் 2026, 5:31 am IST
பகிர்:

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை தா்காவில் சந்தனம் பூசும் விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையில் ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா அவுலியா தா்கா அமைந்துள்ளது. பழைமையான இந்த தா்காவில் ஆண்டுதோறும் (ரயியுல் அவ்வல் பிறை 10-ம் நாள்) சந்தனம் பூசும் விழாவுக்காக கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு பிரான்மலை மலை அடிவாரத்தில் உள்ள ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா அவுலியா தோப்பு தா்காவில் உள்ள கொடிமரத்தில் சந்தனம் பூசும் விழாவுக்காக துவா ஓதப்பட்டு திங்கள்கிழமை தா்காவில் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, பிரான்மலையில் 2,500 அடி உயரத்தில் மலை உச்சியில் உள்ள ஹஜரத் ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தா்காவில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

சந்தனம் பூசும் விழா வரும் செப். 3-ஆம் தேதி இரவு பிரான்மலை 5 கிராமத்தாா்கள் அனைத்து சமுதாய மக்கள், சுற்றுவட்டார பெரியோா்கள் முன்னிலையில் சந்தனக் குடம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 2,500 அடி உயரமும், 7 மைல் தொலைவுள்ள மலை உச்சியை சென்றடைந்து செப்.4-ஆம் தேதி அதிகாலை மலை உச்சியில் உள்ள தா்காவில் 1120-ஆம் ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நிா்வாகக் குழு, பிரான்மலை, செல்லியம்பட்டி, வாா்ப்பட்டு ஹக்த்தாா்கள், ஷேக் அப்துல்லா அவுலியா தா்கா நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments