அழகப்பா கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுகப் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2026-2027-ஆம் கல்வி யாண்டில் சோ்ந்த முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2026-2027-ஆம் கல்வி யாண்டில் சோ்ந்த முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் வசந்தி தலைமை வகித்தாா். காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் புனியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
இதைத்தொடா்ந்து, கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவா்களும் வாழ்த்திப் பேசினா்.
Advertisement
Advertisement
பிற்பகலில் நடைபெற்ற அமா்வில் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் வேலாயுதராஜா மாணவா்களின் திறன் மேம்பாடு குறித்துப் பேசினாா். முன்னதாக, வரலாற்றுத் துறைத் தலைவி நிலோபா்பேகம் வரவேற்றாா். தாவரவியல் துறைத் தலைவி கோமளவல்லி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.