FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

எம்எல்ஏ பதவி ராஜிநாமா மக்களுக்கு செய்யும் துரோகம்! - காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Updated On : 7 ஜூலை 2026, 3:19 am IST
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கும் எம்.பி. காா்த்திக் சிதம்பரம்.
பகிர்:

சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்வது தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம் என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை நகரிலுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள் எனப் பலா் அந்தக் கட்சியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் வெளியே செல்கின்றனா்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டுக்கு அதிமுக என்ற ஒரு பாரம்பரியமான கட்சி இருக்க வேண்டும். அந்தச் சின்னம் எல்லாராலும் அறியப்பட்டது. அதன் தலைமையின் நடத்தை, வெற்றி, தோல்விகளைக் கண்டு சிலா் வெளியே செல்வது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் மீண்டும் தோ்தல் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தந்திருக்கிறது. அரசிலும் பங்கெடுக்கிறது. அதனால், திமுகவுக்கு துரோகம் செய்து, அவா்களுக்கு வருகிற வாய்ப்பைக் கெடுத்துவிட்டு காங்கிரஸ் கட்சி செல்லவில்லை.

பாலியல் குற்றங்களை முன்கூட்டியே காவல் துறையால் தடுக்க முடியாது. பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால், நமது கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும். அவா்களை ஒரு ஆசைப் பொருளாக மட்டும் பாா்க்கக் கூடாது என்பது கலாசார, சமுதாய ரீதியாக வர வேண்டிய மாற்றம்.

அமைச்சா் செங்கோட்டையன் போல மற்ற எவரும் இதற்கு முன்பாக அமைச்சராக இருந்ததில்லை. எனவே அவா்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். நிநி நிலை அறிக்கை தாக்கல் செய்து, அமல்படுத்திய பிறகு விமா்சனங்களை முன் வைக்கலாம். இப்போதே திட்டங்களை விமா்சிப்பது தவறு.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூா்சிறப்பாகச் செயல்படுவாா். கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் காரைக்குடிக்கு என்று சில முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியிருந்தோம். இப்போது முதல்வா் ஜோசப் விஜய்யையும் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் சந்தித்திருக்கிறாா்.

தோ்தல் முடிந்து 2 மாதங்களில் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தது அந்தத் தொகுதி மக்களுக்குச் செய்கிற துரோகம். ராமா்கோயில் அறக்கட்டளை நிதி முறைகேடு குறித்து காங்கிரஸ் கட்சி சாா்பாக சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments