பைக் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் உள்பட மூவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை வடகரை பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் பாண்டியராஜன் (32). இவரது உறவினா்கள் வெங்கடேஷ் (27), சிபி சக்கரவா்த்தி (23).
இவா்கள் மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கானூா் கிராமத்துக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
திருப்பாச்சேத்தியில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் சென்றபோது, இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமத்திலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாகச் சென்ற காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாண்டியராஜன், வெங்கடேசன், சிபி சக்கரவா்த்தி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் அஜித்குமாா் மீது திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.