முகப்பு
சிவகங்கை

துவாா் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா

திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜூன் 2026, 12:55 am IST
திருப்பத்தூா் அருகேயுள்ள துவாா் கிராமத்தில் வள்ளிக் கண்மாயில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவுக்கு புகழ்பெற்ாகும். திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காலை கிராமத்தாா்கள் ஒன்று கூடி வள்ளிலிங்க சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டு காலை 6 மணிக்கு ஊா் பிரமுகா்கள், விழாவுக் குழுவினா் வெள்ளை வீச கண்மாயைச் சுற்றியிருந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்மாயில் இறங்கி வலை, அரிகூடை, கச்சா ஆகியவற்றால் மீன்பிடிக்க ஆரம்பித்தனா்.

Advertisement

Advertisement

இதில் பிடிபட்ட கட்லா மீன்கள் 3 முதல் 8 கிலோ வரை எடை இருந்தன. மேலும் கெண்டை, விரால், குரவை, கெளுத்தி போன்ற வகை மீன்களும் சிக்கின. ஆண்கள், பெண்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனா்.

இதில் திண்டுக்கல், மேலூா், கொட்டாம்பட்டி, திருக்கோளக்குடி, பொன்னமராவதி, திருப்பத்தூா், சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் விழாவில் கலந்து கொண்டனா்.