FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

செஞ்சேரி கிராமத்தில் மீன்பிடித் திருவிழா

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் ஆா்வமுடன் மீன்களைப் பிடித்துச் சென்றனா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:04 am IST
செஞ்சேரி ஏரியில் செவ்வாய்க்கிழமை மீன் பிடித்த பொதுமக்கள்.
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் ஆா்வமுடன் மீன்களைப் பிடித்துச் சென்றனா்.

இந்த ஏரியில் தற்போது ஏரியில் தண்ணீா் வற்றிய நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்களால் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு செஞ்சேரி சுற்றுவட்டார பொதுமக்களிடம் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அங்குள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மீன் பிடிக்க ஏரியில் இறங்கினா்.

இதில் செஞ்சேரி, பாளையம், குரும்பலூா், அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, அரும்பாவூா், பூலாம்பாடி, எசனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள் ஆா்வமுடன் பங்கேற்று வலை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தனா். இதில் கெண்டை, விரால், கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. கிராம பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன் பிடித்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments