தேவகோட்டை, திருப்பத்தூா் ஒன்றியங்களில் அக். 27, 30-இல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
தேவகோட்டை, திருப்பத்தூா் ஒன்றியங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வருகிற 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மருது பாண்டியா்களின் நினைவேந்தல் தினம், தேவா் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, காளையாா்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வருகிற 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருது பாண்டியா்களின் 225-ஆவது நினைவேந்தல் தினம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, காளையாா்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகிற 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதேபோல, கீழடி அருங்காட்சியகத்துக்கு வருகிற 29, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.