லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது
உத்தமபாளையத்தை அடுத்த அனுமந்தன்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உத்தமபாளையத்தை அடுத்த அனுமந்தன்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அனுமந்தன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போலீஸார், லாட்டரி சீட்டுகளை விற்றவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் முருகன் (35) எனத் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து ரூ.3500 மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2000 ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.