FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமல்: குறைதீர் கூட்டம், முகாம்கள் ரத்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டம் மற்றும் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்தார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டம் மற்றும் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்தார்.

   சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மண்டல தேர்தல் அலுவலர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் மேலும் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

   மாவட்டத்தில் அரசுத் துறைகளுக்குச் சொந்தமான கட்டட வளாகங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.

Advertisement

Advertisement

 ஏற்கனவே, அரசியல் கட்சிகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

   தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், விவாசயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகிய முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பயன்படுத்தி வரும் அரசு வாகனங்களை உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

   சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின கண்காணிப்புக் குழு, பறக்கும்படை  மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியன கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், சாய்வுதளப் பாதையும் உள்ளதை உறுதி செய்யவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments