தனியார் மதுக்கூடத்தில் பதுக்கிய 328 மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
தேனி அருகே வியாழக்கிழமை தனியார் மதுக்கூடத்தில் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 328 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.
தேனி அருகே வியாழக்கிழமை தனியார் மதுக்கூடத்தில் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 328 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் தனியார் மதுக்கூடம் இயங்கி வருகிறது. இக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் போலீஸாருக்கு வந்தன. இதைத்தொடர்ந்து, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மற்றும் மாவட்ட கலால்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டாமல் விற்பனைக்கு வைத்திருந்த 328 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, மதுக்கூடத்தில் பணியாற்றிய மலைச்சாமி(33), ஜெயப்பிரபு, சுரேஷ், முத்துகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.