FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போலி ஆவணம் தயாரித்து  நிலம் மோசடி: 10 பேர் மீது வழக்கு

தேனி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்று மோசடி செய்ய முயன்ற 10 பேர் மீது மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:26 am IST
பகிர்:

தேனி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்று மோசடி செய்ய முயன்ற 10 பேர் மீது மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.
பெரியகுளம், விஜயபவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். வீரபாண்டியில் இவருக்குச் சொந்தமாக 46 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தேனி அருகே அரண்மனைப்புதூர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த விஜயராஜன், ராமர், தனலட்சுமி, கணேஷ்வரி, ஜெயலட்சுமி, சுபஸ்ரீ, சூர்யலட்சுமி, கோகிலவாணி, கதிர்வேல் பாண்டியன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து, ஆண்டிபட்டியை அடுத்த அனுப்பபட்டியைச் சேர்ந்த தங்கையாவுக்கு விற்பனை 
செய்ய முயன்றனராம். இதுகுறித்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம், ராமச்சந்திரன் புகார் அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில்,விஜயராஜன், தங்கையா உள்ளிட்ட 10 பேர் மீதும் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments