மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சியினர் மனு
தேனி மாவட்டத்தில், கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
தேனி மாவட்டத்தில், கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமியிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
அக்கட்சியின் தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு விவரம்: கேரளத்தில் இருந்து தேனி மாவட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டுச் செல்கின்றனர். சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் இதுபோன்று, கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு, தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது.
எனவே, சுகாதாரத்தை பாதுகாக்க இதுபோன்ற சம்பவங்களை தடுத்து, மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.