FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

18-ஆம் கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தேவாரம் அருகே புதர் மண்டி கிடக்கும் 18-ஆம் கால்வாயை தூர் வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:26 am IST
பகிர்:

தேவாரம் அருகே புதர் மண்டி கிடக்கும் 18-ஆம் கால்வாயை தூர் வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தமபாளையம், தேவாரம், போடி பகுதி விவசாயிகளின் நலன் கருதி முல்லை பெரியாறு தண்ணீரை கொண்டு வருவதற்காக 18-ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள நீரின் மொத்த கொள்ளளவு ஆறேகால் டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தால் 18-ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது இரு அணைகளிலும் பரவலான மழையின் காரணமாக தண்ணீர் அதிகமாக உள்ளது. இதனையடுத்து முல்லை பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுப்பணித்துறையினரும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 40 கி.மீ. தொலைவு உள்ள 18-ஆம் கால்வாய் இரண்டு ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது கால்வாய் முழுவதும் புதர் மண்டி மேடும், பள்ளமுமாக உள்ளது.
இந்நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டால், கடைமடை பகுதியான தேவாரம், போடி கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, தண்ணீர் திறப்புக்கு முன்னதாக 18-ஆம் கால்வாயை தூர்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்த கோரிக்கை மனுவை, 18-ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் தமிழக துணை முதல்வர், மாவட்ட ஆட்சியர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments