கம்பம் பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் அமோகம்: விலை குறைவால் விவசாயிகள் கவலை
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்தும் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்தும் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கம்பம் பகுதிகளில் குறுகிய காலத்தில் பலன் கிடைக்கும் காய்கறிகளில் கொத்தமல்லி தழை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்ததால், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் இருப்பு உயர்ந்தது. இந்த பருவ காலத்தில், குறுகிய கால பயிர்களான பீட்ரூட், கீரை வகைகள் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டதில், தற்போது கொத்தமல்லி தழை அறுவடைக்கு வந்துள்ளது.
அதேநேரம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சந்தைகளிலிருந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டாரச் சந்தைகளுக்கு கொத்தமல்லி தழை விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், சந்தைகளில் கொத்தமல்லிக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
கடந்த வாரங்களில் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30-க்கு விற்பனையானது. தற்போது ரூ.7-க்கு விற்பனையாகிறது. இதை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், அறுவடையின் மூலம் ரூ.14 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளதால், கம்பம் பகுதி விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.