காமயகவுண்டன்பட்டியில் மது பாட்டில்கள் விற்பனை: 2 பேர் கைது
காமயகவுண்டன்பட்டியில் மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
காமயகவுண்டன்பட்டியில் மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ளது காமயகவுண்டன்பட்டி. இங்கு திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பபடுவதாக ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர்.
கிரஷர் சாலையில் செல்லும் போது சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன்(34), காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி(42) ஆகிய இருவரும் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
போலீஸார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 65 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.