FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சின்னமனூரில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை குறைவால் விவசாயிகள் வேதனை

சின்னமனூர் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்து,  விலை குறைந்தால்  விவசாயிகள் வேதனை அடைந்தனர். 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

சின்னமனூர் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்து,  விலை குறைந்தால்  விவசாயிகள் வேதனை அடைந்தனர். 
கம்பம் பள்ளத்தாக்கில்  சின்னவெங்காயம் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரையில் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல்  ரூ. 80 வரை விற்கப்பட்டது. 
தேனி மாவட்டத்தில் சின்ன  வெங்காயம் விளைச்சல் குறைந்து நிலையில்,  கடந்த மாதம் வரையில் வெளி மாவட்டத்திலிருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டது. 
தென்மேற்கு பருவமழை ஒரளவிற்கு கை கொடுத்த நிலையில் ஜூலை மாதத்திலிருந்து சின்னமனூர் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது. இதனால்  வரத்து அதிகரித்துள்ளதால் சந்தைகளில் கிலோ ரூ.20 ஆக சரிந்துள்ளது. 
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் ஏக்கருக்கு 6 டன்  வரை அறுவடை செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகள் எதிர்பாராத நிலையில் கிலோ ரூ.20 ஆக குறைந்துவிட்டது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments