FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திராட்சை தோட்டங்களில் பழம் வெடிப்பை தடுக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர் மழையால் திராட்சை தோடங்களில், திராட்சை பழம் வெடிப்பு மற்றும் அழுகல் பாதிப்பை

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர் மழையால் திராட்சை தோடங்களில், திராட்சை பழம் வெடிப்பு மற்றும் அழுகல் பாதிப்பை குறிப்பதற்கான வழிமுறைகள் குறித்து வியாழக்கிழமை, திராட்சை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழஞ்சி, பூசாரிகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் விதையில்லா திராட்சைகள் கொடியிலேயே வெடிப்பு ஏற்பட்டும், அழுகியும் சேதமைடந்து வருகிறது. இதனால், திராட்சை விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆணைமலையன்பட்டி தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் சே.சரஸ்வதி, ஆ.சுப்பையா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.இது குறித்து வியாழக்கிழமை அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: கால்சியம், பொட்டாசியம் மற்றும் போரான் போன்ற சத்துக்களின் குறைபாடு,  பழக் காம்புகள், பழத் தோல் பகுதி மற்றும் இலைகளின் மேல் மழைக் காலத்தில் தண்ணீர் நீண்ட நேரம் தங்கியிருத்தல், தோட்டத்தில் முறையான வடிகால் வசதியின்மை ஆகியவை திராட்சை பழம் வெடிப்பு காரணமாக உள்ளது.
திராட்சை தோட்டங்களில் பிஞ்சு இறக்கி கட்டிய பின்னர் குலைகளை தலா 0.5 சதவிகிதம் பொட்டாசியம் நெட்ரேட், கால்சியம் நைட்ரேட் கரைசலில் நனைத்து அமிழ்த்தி எடுப்பதன் மூலம் பழங்களின் பருமன் மற்றும் தோலின் கெட்டித் தன்மையை அதிகரிக்கலாம். திராட்சை குலைகள் பிஞ்சு பருவத்தில் இருந்து காய் பருவத்தை அடையும் போது, ஒரு சதவிகிதம் சல்பேட் ஆப் பொட்டா மற்றும் 0.2 சதவிகிதம் கால்சியம் குளோரைடு தெளிப்பதால் பழங்களின் பருமன் மற்றும் தோலின் கெட்டித் தன்மையை அதிகரிக்கலாம்.
திராட்சை குலைகள் காய் பருவத்தில் இருந்து உடவு பருவத்தை அடையும் போது, 0.3 சதவிகிதம் கால்சியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் பழங்களின் தோலின் கெட்டித் தன்மையை அதிகரித்து, நீர்ச்சத்தினை குறைத்து பழங்களில் வெடிப்பு ஏற்படுவதை குறைக்கலாம். மேலும் பழங்களின் அழுகும் தன்மைக்கு காரணமான பூஞ்சாணங்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிராம் பெனோமில் மற்றும் 2.5 மில்லி மாலத்தியான் தெளிப்பதன் மூலம் சேதாரமில்லா பழக் கொத்துக்களை அறுவடை செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments