FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பூமலைக்குண்டு கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா

தேனி அருகே பூமலைக்குண்டு கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தேனி அருகே பூமலைக்குண்டு கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி தேர்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விழா நடைபெறுகிறது.
   விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஊர் மக்கள் சார்பில் திருவிளக்கு பூஜை மற்றும் நகர்வலம் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விநாயகர் கோயிலிருந்து கைசப்பரம் மற்றும் பூஜை பொருள்கள் கொண்டுவரப்பட்டது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் எடுத்துவரப்பட்டது. அதன் பிறகு காலை 7.15 மணிக்கு பெரிய தேரில் சுவாமி எழுந்தருளியதைத் தொடர்ந்து தேர் புறப்பாடு நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் ஊர்பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் வியாழக்கிழமை காலை தேர் புறப்பாடாகி நிலையை வந்தடைதல் மற்றும் மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூமலைக்குண்டு கிராமத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments