FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சக்கரத்தாழ்வாருக்கு விமோசனம் அளித்த கதலி நரசிங்கப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது, பெருமாளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர். 
பெரியகுளம்: இங்குள்ள வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர், அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதேபோல், பாம்பாற்று ஆஞ்சநேயர் கோயில், நாமத்துவார் பிரார்த்தனை மையம் மற்றும் தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயில்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
போடி: இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதற்காக, சொர்க்க வாசல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு முதல் சொர்க்கவாசல் மண்டபத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை அடுத்து,  ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர். மேலும், மூலவருக்கும்  அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் சன்னதியில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, சங்கரநாராயண பெருமாளுக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. 
போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராய பெருமாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயப் பெருமாள் கோயில், சிலமலை பெருமாள் கோயில், தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments