"நீட்' தேர்வு பயிற்சியில் ஈடுபடுத்த எதிர்ப்பு: தேனியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனியில் அரசு நீட் தேர்வு இலவச பயிற்சி மையங்களில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை
தேனியில் அரசு நீட் தேர்வு இலவச பயிற்சி மையங்களில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் முத்தரசப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கௌதம் அசோக்குமார், பொருளாளர் வசந்தா, மாவட்ட அமைப்புச் செயலர் துரைப்பாண்டியன், கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளி ஆசிரியர்கள் சங்க துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கும், அதிக மதிப்பெண் பெறுவதற்கு பயிற்சி அளிக்கவும் ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது.
இந்நிலையில் அரசு சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.