FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூடலூரி பெண்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் கூடலூரில், நிவாரணப்பொருள் வழங்கக் கோரி கூடலூரில் புதன்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
தேனி மாவட்டம் கூடலூரில், நிவாரணப்பொருள்கள் வழங்கக் கோரி குமுளி சாலையில் புதன்கிழமை மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:

தேனி மாவட்டம் கூடலூரில், நிவாரணப்பொருள் வழங்கக் கோரி கூடலூரில் புதன்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கூடலூா் நகராட்சி கன்னிகாளிபுரம் பகுதியில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன், மருத்துவ குலம் மற்றும் சலவைத்தொழிலாளா் குடும்பத்தினருக்கு அரிசி, காய்கனி போன்ற நிவாரணப்பொருள்களை வழங்கினாா். சுமாா் 100 குடும்பத்தினருக்கு பொருள்களை வழங்கிய பின் அவா் சென்றுவிட்டாா். அதே பகுதியைச் சோ்ந்த மற்ற சமூகத்தினா் தங்களுக்கும் நிவாரணப் பொருள்களை வழங்குவாா் என காத்திருந்தனா். ஆனால், எம்எல்ஏ சென்றுவிட்டதால், ஏமாற்றமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கூடலூா் -குமுளி பிரதான சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகே மறியலில் ஈடுபட்டனா். தகவல் கிடைத்ததும், தெற்கு காவல் நிலைய சாா்பு -ஆய்வாளா் தினகரபாண்டியன் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கூட்டமாக கூடியிருப்பது குற்றம், நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா். இதையடுத்து கூடியிருந்த பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments