பெரியகுளத்தில் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நல்லாசிரியர் தெ.குப்புச்சாமி எழுதிய பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை ) நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நல்லாசிரியர் தெ.குப்புச்சாமி எழுதிய பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் இலக்கிய வட்டத்தலைவர் ஜி.கே.மணிகார்த்திக் தலைமை வகித்தார். சிறுமி பிரணவி தங்கத்துரையின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பி.ராம்குமார் முன்னிலை வகித்தார்.
பசும்பொன் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பாக நல்லாசிரியர் சு.குப்புசாமி எழுதிய 235 வது நூலான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூலை நூல் ஆசிரியர் வெளியிட ஜெயா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் ஓ.சண்முக சுந்தரம் பெற்றுக்கொண்டார். நூல் ஆசிரியர் சு.குப்புசாமி ஏற்புரை வழங்கினார்.
Advertisement
Advertisement
விழாவில் பேராசிரியர் சே.பத்மினிபாலா, வெற்றித்தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.எம்.அழகர், வடகரை நூலக வட்ட தலைவர் அகமது முஸ்தபா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டி.கள்ளிப்பட்டி பசும்பொன் இளைஞர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.