முகப்பு
தேனி

சுருளிமலை ஐயப்ப சுவாமிக்கு உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை 

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு வைகாசி மாத உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில்  ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயம் உள்ளது. இங்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இங்கும் நடைபெறும்.

வைகாசி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் என்பதால் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கோயிலில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கம்பம் வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கணேஷ் திருமேனி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.