FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேரணாம்பட்டு அரசு பள்ளி பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 படித்து வரும் இரண்டு மாணவிகள் மாயமான சம்பவம் குறித்து...

மாயமான பேரணாம்பட்டு அரசு பள்ளி பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் குறித்து போலீசார் விசாரணை - கோப்புப்படம்
பகிர்:

வேலூர்: பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 படித்து வரும் இரண்டு மாணவிகள் மாயமான சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பாத நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே மகளுடன் படிக்கும் சக தோழியான சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் உங்கள் மகளும், எனது மகளும் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளியில் இருந்து போனில் தெரிவித்ததாகவும், எனது மகள் வீட்டில் இருந்த செல்போனை எடுத்து சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் மாயமானதால் அவர்களை உறவினா்கள் மற்றும் தோழிகள் என பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லையாம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாணவிகளின் பெற்றோா் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இது குறித்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி எடுத்துச் சென்றுள்ள செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

ஒரே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவிகள் திடீரென காணாமல் போன சம்பவம் அந்த பகுதியிலும், பள்ளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Two Plus 1 girl students from a government school in Pernambut go missing; police investigate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments