வண்டலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை! பெற்றோர்கள் போராட்டம்!
வண்டலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் உறவினர்கள் போராட்டம்...
வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் 10 -ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக பள்ளி முன்பாக பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்குள் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக எகிறி குதித்த ஒரு கும்பல், மாணவிக்கு கைக்குட்டை மூலமாக மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தும் பள்ளி தரப்பில் அலட்சியமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்திய நிலையில் தொடர்ந்து வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பிரசாரம் செய்யவுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
School girl sexually harassed after intruder enters school near Vandalur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.