வண்டலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை! கேடுகெட்ட ஆட்சி நடத்தும் தவெக அரசு: கனிமொழி
வண்டலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை காவல்துறை மூடி மறைக்க முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியது குறித்து...
செங்கல்பட்டு வண்டலூரில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை காவல்துறை மூடி மறைக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
வண்டலூரில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. கூறியிருப்பதாவது, "வண்டலூர் அருகே பள்ளி வளாகத்துக்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இன்று முதல்வர் விஜய் மதுராந்தகம் வருகிறார் என்பதற்காக, இந்தச் சம்பவத்தை பொய்ச் செய்தி எனக் கூறி, மூடி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை, இந்த தவெக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட, முதல்வரின் வருகைக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதுதான் காவல்துறையின் முன்னுரிமை என்றால், உண்மையில் இது யாருக்கான ஆட்சி? எப்படி அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்கும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக எகிறிக் குதித்த ஒரு கும்பல், மாணவிக்கு கைக்குட்டை மூலமாக மயக்க மருந்து கொடுத்து கழிப்பறையில் வைத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தும் பள்ளி தரப்பில் அலட்சியமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
DMK MP Kanimozhi alleges that the police are attempting to cover up the incident involving the sexual assault of a schoolgirl near Vandalur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.