FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆதாரங்கள் இல்லை! வண்டலூர் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் காவல்துறை விளக்கம்

வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை புகாரில் தாம்பரம் மாநகரக் காவல்துறை மறுப்பு தெரிவித்தது குறித்து...

25 செப்டம்பர் 2026, 1:11 pm IST
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு தாம்பரம் மாநகரக் காவல்துறை மறுப்பு
பகிர்:

வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் அத்தகைய சம்பவம் எதுவும் நடந்ததாக விசாரணையில் தெரியவில்லை என தாம்பரம் மாநகரக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் குறித்து தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குள்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு கிடைக்கப்பெறவில்லை.

எனினும், ஆதாரமும் இந்நிலையில் இதுவரை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல்களை கருத்தில்கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக எகிறிக் குதித்த ஒரு கும்பல், மாணவிக்கு கைக்குட்டை மூலமாக மயக்க மருந்து கொடுத்து கழிப்பறையில் வைத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தும் பள்ளி தரப்பில் அலட்சியமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

summary

Tambaram City Police deny allegations of sexual assault of a schoolgirl near Vandalur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments