ஒடிசா உண்டு-உறைவிடப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 46 மாணவிகள் உடல்நல பாதிப்பு!
ஒடிசா பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் பற்றி..
ஒடிசாவின் மயர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி தொகுதியில் அமைந்துள்ள மந்திரி எஸ்எஸ்டி பெண்கள் உண்டு-உறைவிடப் பள்ளியில் புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 46 மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் தகவலின்படி, எட்டு மாணவிகள் மந்திரி சுகாதார மையத்திலும், 11 பேர் படாசாஹி குழு சுகாதார மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 27 மாணவிகளுக்குப் பள்ளியின் விடுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
வியாழக்கிழமையன்று இச்சம்பவம் குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்குக் கிடைத்ததாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பள்ளியை நேரில் பார்வையிட்டதாகவும் மயூர்பஞ்ச் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நேத்ரானந்தா மல்லிக் தெரிவித்தார்.
உணவு மற்றும் பிற விஷயங்களில் சுகாதாரமான சூழலை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
உணவு மற்றும் பிற அம்சங்களில் சுகாதாரமான சூழலை உறுதி செய்யுமாறு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் தீர்வு காணப்படும்.
மாணவிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். உடல்நலக் குறைவுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; விசாரணை முடிந்த பிறகு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.