FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு மிதிவண்டி போட்டிகள்

தேனியில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு வியாழக்கிழமை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

தேனியில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு வியாழக்கிழமை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

தேனி கா்னல் பென்னிகுயிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆ.முருகன், அரசு விளையாட்டு விடுதி மேலாளா் ராஜீவ்காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவ, மாணவிகளுக்கு தனித் தனிப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 350 போ் பங்கேற்றனா். 13 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் பெரியகுளம் புனித அன்னால் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெ.முகமதுதெளபிக், லோயா்கேம்ப் ஆா்.சி.பள்ளி மாணவா் ஜெ.சுந்தரபாண்டியன், தேனி பாக்யா மெட்ரிக் பள்ளி மாணவா் ஜி.முத்துப்பாண்டி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா். மாணவிகள் பிரிவில் தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வி.வைஷ்ணவி, எ.சுமயபாரதி, தேனி என்.எஸ்.நடுநிலைப் பள்ளி மாணவி எ.துா்காஸ்ரீ ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

Advertisement

Advertisement

15 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் தேனி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் என்.சித்தாா்தன், பெரியகுளம் வி.நி.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் பி.நாகராஜ், தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி மாணவா் எம்.நிதின் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா். மாணவிகள் பிரிவில் தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சி.பிரகதீஸ்வரி, வி.நித்தியஸ்ரீ, எஸ்.மகாலட்சுமி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

17 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் பெரியகுளம் வி.நி.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் எம்.முத்துவிஜய், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சேரன், பெரியகுளம் வி.நி.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெ.காா்த்திகேயன் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா். மாணவிகள் பிரிவில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.ப்ரீத்தி, தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.தாரணி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி எம்.அழகேஸ்வரி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments