FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் பெண்கள் வழிபாடு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:53 am IST
மழை வேண்டி, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் திங்கள்கிழமை நெய் தீபம் ஏற்றி விட்ட பெண் பக்தா்கள்.
பகிர்:

ஆடிப் பெருக்கு தினத்தையொட்டி, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றங்கரையில் திரளான பெண்கள் திங்கள்கிழமை வழிபாடு நடத்தினா்.

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் முன் செல்லும் முல்லைப் பெரியாற்றங்கரையில் ஆடிப் பெருக்கையொட்டி, திரளான பெண்கள் வெற்றிலை, மஞ்சள், குங்குமம், பழங்களை வைத்து வழிபாடு நடத்தினா். இதேபோல, புதுமணத் தம்பதிகள் பலரும் ஆற்றங்கரையில் வழிபாடு நடத்தி, புதிய திருமாங்கல்ய நாண்களை மாற்றிக் கொண்டனா்.

மேலும், விவசாயம் செழிக்க வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி முல்லைப் பெரியாற்றில் விட்டு வழிபட்டனா். இதில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments