FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆடிப் பெருக்கு! தாமிரவருணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!

ஆடிப் பெருக்கு நாளில் தாமிரவருணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் வழிபட்டது பற்றி...

ஆடிப்பெருக்கு விழா - from video grab
பகிர்:

ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி நெல்லை தாமிரவருணி ஆற்றில் புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு தாமிரவருணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர்.

ஆடிப் பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நாள் கொண்டாடப்படும் நிகழ்வாகும். தமிழகத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் கொண்டாடும் பாரம்பரிய விழாவாகும்.

இத்தினத்தில் காவிரி உள்ளிட்ட நதிக்கரைகளில் மக்கள் கூடி நீராடி, இயற்கைக்கு நன்றி செலுத்தி, புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வது வழக்கம்.

Advertisement

Advertisement

அதன்படி நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தாமிரவருணி படித்துறையிலும் 18ம் பெருக்கையொட்டி பெண்கள் திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

தாமிரவருணி நதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்ததோடு கலசங்களுக்கு மஞ்சள் கயிறு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு பல்வேறு வகையான சாதங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து புதுமண தம்பதிகள் தங்களது திருமாங்கல்ய மஞ்சள் கயிறு மாற்றியும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு புதிய வஸ்திரங்கள், வளையல், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட சுப மங்கள பொருட்களோடு அகல் விளக்கு ஏற்றி தாமிரவருணி நதியில் சமர்ப்பித்தும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

summary

Aadi Perukku! Special puja and ceremonial offerings for the Thamirabarani River!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments