FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு: பூக்களின் விலை கடும் உயர்வு! மல்லிகைப்பூ, கனகாம்பரம் கிலோ ரூ.1,000!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது குறித்து....

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:32 pm IST
தஞ்சாவூர் பூச்சந்தை
பகிர்:

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்து, விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம்‌ முழுவதும் நாளை(ஆக. 3) ஆடிப்பெருக்கு திருவிழா‌ கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, தஞ்சாவூரில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தஞ்சாவூர் பூச்சந்தையில் மற்றும் தொல்காப்பியர் சதுக்கம் பூச்சந்தை ஆகியவற்றில் இன்று(ஆக. 2) பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

மல்லிகைப் பூக்கள் கடந்த வாரங்களில் கிலோ ரூ. 300 முதல் ரூ. 500-க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோ ரூ.750 முதல் ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

கனகாம்பரம் பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சந்தனமுல்லை ரூ. 800, முல்லை ரூ. 600, அரளி ரூ. 500, செவ்வந்தி ரூ. 320, சம்பங்கி ரூ. 300, ஆப்பிள் ரோஸ் ரூ. 250-க்கும் விற்பனையாகி வருகின்றன.

இந்தப் பூக்களும் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், இன்று விலை அதிகமாகும். தஞ்சாவூர் பூச்சந்தைக்கு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Ahead of the Aadi Perukku festival, flower prices in Thanjavur have risen, and sales are underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments